நான் குடித்துவிட்டு இதை செய்ய மாட்டேன்: நீங்கள்? வீடியோவை வெளியிட்ட கோஹ்லி

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

சாலை பாதுகாப்பு வாரம் குறித்து இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. அதில் சாலை விபத்து பற்றிய விழிப்புணர்வை அரசு மக்களுக்கு அளித்து வருகிறது.

இந்நிலையில் தேசிய சாலை பாதுகாத்து வாரமாகிய இன்று இந்தியா கிரிக்கெட் அணியின் தலைவர் கோஹ்லி அது பற்றி குரல் கொடுத்துள்ளார்.

இது சம்மந்தமாக டுவிட்டரில் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவில் ஒருநாளைக்கு சாலை விபத்தில் 19 பேர் வீதம் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால் மரணம் அடைகின்றனர்.

ஒரு ஆண்டுக்கு 6700 பேர் வீதமாக இந்த எண்ணிக்கை உயர்கிறது, அதனால் இனிமேல் நான் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்ட போவதில்லை, என்னுடன் நீங்களும் கைகோருங்கள் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்