ஸ்டேடியத்தில் அமர்ந்து நீதா அம்பானி செய்த செயல்: வைரல் வீடியோ

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
786Shares
786Shares
ibctamil.com

மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் மே 7 ஆம் திகதி நடைபெற்றது.

முதலில் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது.

அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு 39 பந்தில் 67 ரன்கள் தேவைப்பட்டது. இருப்பினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் 10 போட்டியில் நான்கில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

மும்பை அணியின் வெற்றிக்கு காரணம் அந்த அணியின் உரிமையாளர் நீதா அம்பானி என கூறப்படுகிறது.

என்னதான் வீரர்கள் திறமையாக விளையாடினாலும், ஸ்டேடியத்தில்அமர்ந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த நீதா அம்பானி, தனது அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கண்ணை மூடி சாமி கும்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டு, மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு நீதா அம்பானி சாமி கும்பிட்டதே காரணம் என கூறியுள்ளனர்.

வீடியோவை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்