இலங்கை வீரர் லசித் மலிங்காவின் சொத்து மதிப்பு எவ்வளவு?

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
529Shares
529Shares
ibctamil.com

இலங்கை கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஆவார்.

இவரது பந்துவீச்சு பாணி காரணமாக "சிலிங்க மாலிங்க" என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார். இவரது பந்துவீச்சு மட்டுமன்றி இவரது சிகை அலங்காமும் உலக மக்கள் மத்தியில் பிரலமானது.

கிரிக்கெட் விளையாட்டின் மீது இருந்த அதிகமான ஈடுபாட்டால் 11 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்த பின்னர், 2014 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணியில் இவரது பங்கு அளப்பறியது.

காரணம், 2014 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணியின் டி20 போட்டி மற்றும் ஒருநாள் போட்டியின் அணித்தலைவராக இருந்த இவர், அந்த ஆண்டு இலங்கை அணி டி20 போட்டி வெற்றி பெறுவதற்கு பங்கு வகித்தார்.

தனது முகம் மற்றும் உடம்பில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அணித்தலைவர் பதவியில் இருந்து விலகிய இவர், 2016 ஆம் ஆண்டில் இருந்து கிரிக்கெட் போட்டியில் பின் தள்ளப்பட்டார். அதுமட்டுமன்றி கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் மோதிய டி20 போட்டியில் மலிங்காவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டக்காரராக இருந்து வந்த மலிங்கா, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இடம்பெறவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த இவரை, அந்த அணியும் இந்த ஆண்டு ஏலத்தில் எடுக்கவில்லை.

லசித் மலிங்காவின் நிகர மதிப்பு மற்றும் ஐபிஎல்லில் அவரது சம்பளம் ஆகியவற்றினை அடிப்படையாக வைத்து அவரது சொத்து மதிப்பு 8 மில்லியன் டொலர் ஆகும்.

2016 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டியில் இவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் 1 மில்லியன் டொலர் ஆகும்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்