இந்தியாவின் உதவியை நாடிய பாகிஸ்தான் முன்னாள் ஹாக்கி வீரர் மரணம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
67Shares
67Shares
ibctamil.com

இந்தியாவின் உதவியை எதிர்நோக்கி இருந்த பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் அணித்தலைவர் மன்சூர் அகமது மரணமடைந்தார்.

பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் தலைவர் மன்சூர் அகமது(49). இவர் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் ஹாக்கி அணியில் இடம் பெற்றிருந்தார்.

ஒலிம்பிக்கில் பாகிஸ்தான் அணி வெண்கலப் பதக்கம் வென்றபோது மன்சூர் கோல் கீப்பராக செயல்பட்டிருந்தார். இந்நிலையில் இதயநோயால் பாதிக்கப்பட்ட மன்சூர், கராச்சி நகரில் உள்ள ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால், அவருக்கு உடனடியாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இதனால் இந்தியாவின் உதவியை எதிர்நோக்கி விசாவுக்காக காத்திருந்தார் மன்சூர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உறவுகள் சீரற்ற நிலையில் இருப்பதால், மருத்துவ விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மன்சூர் அகமது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்