அய்யோ...பைத்தியமே பிடித்துவிட்டது: விராட் கோஹ்லி

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
475Shares
475Shares
ibctamil.com

விராட் கோஹ்லியின் அதிரடியான ஆட்டத்தால் 10 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

பெங்களூரு அணிக்கு இது 5வது வெற்றி. அதேபோல், 12 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணிக்கு இது 6வது தோல்வி ஆகும். இதனால் பஞ்சாப் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் பெங்களூர் அணி வெற்றி பெற்றால், மற்ற அணிகளின் முடிவை பொறுத்து வாய்ப்பு அமையும்.

வெற்றிக்குப் பின் விராட் கூறியதாவது, கடந்த ஒரு வாரமாக பைத்தியம் பிடித்தது போல் இருந்தது. ஒருகட்டத்தில் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறிவிட்டோம் என்றே நினைத்தேன்.

ஆனால், அடுத்தடுத்தப் போட்டிகளில் வெற்றி பெற்று பாயின்ட் டேபிளிலில் முன்னேறியதும் நம்பிக்கை பிறந்தது. அடுத்து வர இருக்கிற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல முடியும். ரன் ரேட்டும் நன்றாக இருக்கிறது.

இன்றைய போட்டியில் எங்கள் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்