சென்னை அணிக்காக பாடல் பாடிய இங்கிலாந்து வீரர்: வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
111Shares
111Shares
ibctamil.com

சென்னை அணியில் இருந்து பாதியில் வெளியேறி இங்கிலாந்து சென்ற மார்க் வுட், தற்போது சென்னை அணிக்கும், அம்பத்தி ராயுடுவுக்கும் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் விளையாட இருந்ததால், சென்னை அணி நிர்வாகம் முன்னதாகவே அவரை விடுவித்தது.

அதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து சென்ற மார்க் வுட் சென்னை அணியின் ஆட்டங்களைப் பார்த்து ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணியுடனான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற சதம் விளாசிய அம்பத்தி ராயுடுவைப் பாராட்டியும், சென்னை அணியை நினைவு கூர்ந்தும் தன் நண்பர்களுடன் இணைந்து மார்க் வுட் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த பாடல் வீடியோவை தனது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்நிலையில், சென்னை அணி ரசிகர்கள் பலரும் மார்க் வுட்டைப் பாராட்டிப் பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்