அணித்தலைவர் பதவியை விட்டுக் கொடுத்த விராட் கோஹ்லி

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

சமீபத்தில் இத்தாலியில் திருமணம் செய்துகொண்ட விராட் - அனுஷ்கா ஜோடியைப் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வருவது தொடர்கதையாகியுள்ளது.

இந்நிலையில், விராட் கோஹ்லி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அனுஷ்கா சர்மா குறித்து மனம் திறந்து பேசியுள்ள வீடியோ பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்த வீடியோவில் கோஹ்லி கூறியதாவது, என் வாழ்க்கையில் அனுஷ்காவின் பங்கு மிகப்பெரியது, என்னுடைய வெற்றி தோல்வி இரண்டிலும் அவர் என்னுடன் பங்குபெறுவார்,

சர்ச்சைகள் பல இருந்தாலும் மைதானத்திற்கு நேரடியாக வந்து கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது என எனக்காக அனுஷ்கா செய்தது ஏராளம்.

என்னுடைய தீவிர ரசிகை போல் ஒவ்வொரு புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது. முக்கியமான முடிவுகளை எடுக்க எனக்குப் பெரிதும் உதவுவார். வீட்டில் அவர் தான் என்னுடைய அணித்தலைவர்.

ஒவ்வொரு மனிதனுக்கும் நல்ல மனைவி கிடைத்து விட்டால் வேறு என்ன வேண்டும். 'அனுஷ்கா தான் என்னுடைய பலமே' என்று மனம் திறந்து பேசியுள்ளார், இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers