இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி எடுத்த அதிரடி முடிவு

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
289Shares
289Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமியின் மனைவி ஜஹான் மீண்டும் மொடலிங் துறைக்கு திரும்ப முடிவு செய்துள்ளார்.

முகம்மது ஷமிக்கு, பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி ஹசின் ஜஹான் சமீபத்தில் புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஷமி தம்மை துன்புறுத்துவதாகவும் அவர் பொலிசில் புகார் அளித்த நிலையில் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையடுத்து ஷமியும், ஹசினும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில், மகளின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு மீண்டும் மொடலிங் துறைக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக ஹசின் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்