நான் என்ன பைத்தியமா? குல்தீப்பிடம் கோபப்பட்ட டோனி

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்
275Shares
275Shares
lankasrimarket.com

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, கிரிக்கெட் உலகில் 'கூல் கேப்டன்' என கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுவார்.

ஆனால் ஒரு சில நேரங்களில் டோனி கூட கோபப்பட்டு வீரர்களை நோக்கி சத்தமிடுவார்.

அந்த வகையில் வளர்ந்து வரும் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவ் தன்னிடம் டோனி ஒருமுறை கடுமையாக கோபப்பட்டார் என கூறியுள்ளார்.

'வாட் த டக்' என்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள், குல்தீப் யாதவ் மற்றும் யுவேந்திர சகாலிடம், மைதானத்தில் விளையாடும் போது டோனி எப்படியெல்லாம் உதவுவார் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய குல்தீப், கடந்த ஆண்டு இந்தூரில் இலங்கை அணிக்கெதிராக நடைபெற்ற 20ஓவர் போட்டியின்போது, இந்திய அணி 260 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணியின் மட்டையாளர்களும் சிறப்பாக விளையாடி கொண்டிருந்தனர்.

அந்த நேரம் நான் வீசிய நான்காவது ஓவரில் அவர்கள் சிறப்பாக விளையாடியதை பார்த்த டோனி, உடனே என்னிடம் வந்து, கவரில் உள்ள பீல்டரை அங்கிருந்து அகற்றி டீப்பில் நிறுத்துமாறும் பாயிண்ட் பீல்டரை முன்னால் வரச்செய்யுமாறும் அறிவுறுத்தினார்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த நான், "இப்போது உள்ள வியூகம் சரிதான் மகிபாய்’ என்றேன். இதனை கேட்டதும் கோபமடைந்த டோனி, 300 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளேன் நான் என்ன பைத்தியமா? என கூறிவிட்டு சென்றார்.

அதற்கு பலனாக அடுத்த பந்தில் எனக்கு ஒரு விக்கெட் விழுந்தது என குல்தீப் கூறியுள்ளார்.

முன்னதாக குல்தீப் சம்மந்தப்பட்ட போட்டியில் 52 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்