இது தான் சிறந்த வீடியோவாம்... இணையத்தில் வைரலாகும் விராட்கோலி வெளியிட்ட வீடியோ!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியதோடு, தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இரு அணிகளின் திறமையையும் சோதித்து பார்க்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி headingley-ல் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிர வலை பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றினை இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்த வீடியோவினை பார்ப்பது சிறந்த உணர்வுகளில் ஒன்று. எங்களுக்கு நிலையான மற்றும் நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்களுடைய அன்பு, எங்களை இன்னும் கடினமாக உழைக்க தூண்டுகிறது என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers