இங்கிலாந்து ரசிகையை நெகிழ வைத்த விராட் கோஹ்லி

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

இங்கிலாந்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது மைதானத்திற்கு இந்திய வீரர்கள் சென்றுகொண்டிருக்கையில் அங்கு ரசிகை ஒருவரை நெகிழ வைத்துள்ளார் விராட் கோஹ்லி.

மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது இந்திய வீரர்கள் ஹொட்டலில் இருந்து மைதானத்திற்கு கிளம்பிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, இந்திய வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்கு ரசிகர்கள் வெளியே காத்திருந்தார்கள்.

இதில், ஒரு ரசிகை ஒவ்வொரு வீரர்கள் வெளியே வரும்போதும் சென்று ஆட்டோகிராப் கேட்டுள்ளார். ஆனால், வீரர்கள் ஆட்டோகிராப் போட மறுத்துவிட்டனர். டோனியும் ஆட்டோகிராப் போட மறுத்து விலகி சென்றுள்ளார். இவர்களை தொடர்ந்து போனில் பேசியபடி வந்த விராட் கோஹ்லி, அந்த ரசிகைக்கு ஆட்டோகிராப் போட்டு நெகிழ வைத்துள்ளார்.

இதனை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. விராட் கோஹ்லி தான் எங்கு சென்றாலும் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்