டோனியுடனான உறவு குறித்து மனம் திறந்த நடிகை ராய் லட்சுமி

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனியுடனான தனது உறவு குறித்து மனம் திறந்துள்ளார் நடிகர் ராய் லட்சுமி.

2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடராக ராய் லட்சுமி இருந்தபோது, அந்த அணியின் தலைவர் டோனியுடன் டேட்டிங் சென்றுள்ளார்.

இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், டோனி தனது பள்ளித்தோழியை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

டோனி எனது நண்பர் மட்டுமே, நாங்கள் இருவரும் குறைந்த காலமே டேட்டிங் செய்தோம். மற்றபடி எங்கள் இருவருக்குள்ளும் காதல் இல்லை என ராய் லட்சுமி கூறினாலும், டோனி இதுவரை ராய் லட்சுமி குறித்து பேசியது கிடையாது.

இந்நிலையில், டோனி குறித்து பேசிய ராய் லட்சுமி, டோனியுடனான உறவு ஒரு வடுவாக மாறிவிட்டது. அது நீண்டகாலத்திற்கும் போகாது என நம்பதொடங்கிவிட்டேன். ஏனெனில், மக்கள் இன்றும் பொறுமையுடன் டோனி குறித்து என்னிடம் விசாரிக்கின்றனர்.

எனக்கு பிறக்கும் குழந்தை கூட தொலைக்காட்சி செய்திகளை பார்த்து,என்னிடம் டோனி குறித்து கேள்வி கேட்பார்கள் என நினைக்கிறேன்.

நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதை வைத்துள்ளோம். டோனிக்கு திருமணமாகி குழந்தை இருக்கின்ற நிலையில், இனியும் நான் அவர் குறித்து நான் பேசவிரும்பவில்லை. அதனை கடந்துசெல்வதே நல்லது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்