பலாத்கார வழக்கில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் ஒழுக்க விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக, இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் குணதிலகாவை 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவெடுத்துள்ளது.

இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடந்த வாரம் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இடையே, இரவுநேரம் வீரர்கள் தங்கும் ஹோட்டலில் தங்காமல், இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் குணதிலகா (26), தனது நண்பர் செல்லையாவுடன் வெளியில் தங்கிவிட்டு அதிகாலை ஹோட்டலுக்கு வருகை தந்தார்.

வீரர்களுக்கான விதியை மீறியதாக குணதிலகா மீது குற்றசாட்டுக்கள் எழுந்த நிலையில், நார்வே நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் செல்லையா மீது பாலியல் வன்கொடுமை புகார் ஒன்றினை காவல்நிலையத்தில் அளித்தார்.

இதில் குணதிலகாவும் சம்மந்தப்பட்டிருக்கலாம் என கருதிய இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒருநாள் போட்டியில் அவரை தேர்வு செய்யமால் அணியில் இருந்து நீக்கியது.

இதுதொடர்பாக இலங்கை பொலிஸார் கூறுகையில், சம்மந்தப்பட்ட நார்வே பெண் குணதிலகா மீது எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை. ஆனால் செல்லையாவுடன் அவர் ஹோட்டலுக்கு சென்றிருந்ததால் அவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், போட்டி நடைபெறும்பொழுது ஹோட்டல் அறையை விட்டு வீரர்கள் யாரும் வெளியில் செல்ல கூடாது என்ற விதியை குணதிலகா மீறியதால், 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதனால் அவர் அடுத்து தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிகிறது.

முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்தியா, பங்களாதேஷ் உள்ளிட்ட அணிகளுக்கு எதிரான போட்டிகளின் போது, ஒழுங்கீனமாக நடந்துகொண்டது தொடர்பாக பிசிசிஐ விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்