கழிவறையில் குறைமாத சிசு: கர்ப்பமாக இருந்ததே தெரியாது என வீராங்கனை விளக்கம்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

மணிப்பூரிலிருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்திற்கு சென்றுகொண்டிருந்த ஏர் ஆசியா விமானத்தின் கழிவறையில் ரத்தக்கறையுடன் குறைமாத சிசு ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கியவுடன் பொலிசார் பயணிகளை இது தொடர்பாக சுமார் 45 நிமிடங்கள் விசாரித்தனர். இந்த விசாரணைக்கு பிறகு ஆண் பயணிகள் முதலில் வெளியேற்றப்பட்டனர். பின்னர் பெண் பயணிகளிடம் நடத்திய விசாரணையில் 19 வயதுடைய இந்திய விளையாட்டு வீராங்கனை தான்தான் அந்த குழந்தையை கழிவறையில் பிரசவித்து வீசி எறிந்தேன் என தெரிவித்துள்ளார்.

டேக்வோண்டோ விளையாட்டு வீராங்கனையான அவர் தனக்கு தான் கர்ப்பமாக இருந்ததே தெரியாது என தெரிவித்துள்ளார்.

மேலும் விளையாட்டில் அடிபட்டு காயம் ஏற்பட்டதால் வலிநிவாரண மருந்து உட்கொண்டதாக விசாரணையில் தெரியவந்ததால் அந்த மருந்து கருவை அழிந்திருக்குமோ என்ற கோணத்திலும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

அந்த 19 வயதுடைய வீராங்கனை யார் என்பது பற்றிய விவரங்களை பொலிசார் வெளியிடவில்லை.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்