கால்பந்து போட்டியின் இடையே நடுவரின் மண்டையை உடைத்த ரசிகர்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

பிரித்தானியாவில் உள்ளூர் கால்பந்து அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியின்போது ரசிகர் ஒருவர், கப்பை தூக்கி எரிந்து நடுவரின் மண்டையை உடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் உள்ளூர் கால்பந்து அணிகளான Sturm Graz மற்றும் AEK Larnaca அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. இதில் Sturm Graz அணி 2-0 என்ற கோல் கணக்கில் மோசமாக தோல்வியடைந்தது.

இதனால் ஆத்திரமடைந்த ரசிகர் ஒருவர் கப்பை மைதானத்திற்குள் தூக்கி எறிந்துள்ளார். வேகமாக வந்த கப், எல்லைக்கோட்டில் உதவி நடுவராக பணியாற்றி கொண்டிருந்த, சுவிட்சர்லாந்தை சேர்ந்த Fredrik Klyver தலையின் மீது பலமாக தாக்கியது.

இதில் பலத்த காயமடைந்த நடுவரின் தலையில் இருந்து ரத்தம் வேகமாக வெளியேற, மைதானத்திலே அவர் சுருண்டு விழுந்தார்.

இதனையடுத்து விரைந்து வந்த மருத்துவ குழு, அவருக்கு சிகிச்சை அளித்து தலையை சுற்றிலும் ஒரு பெரிய கட்டு போட்டு அழைத்து சென்றனர்.

Uefa Europa League-ல் ரசிகரின் இந்த செயல் ஏற்கத்தக்கது அல்ல. இந்த செயலில் ஈடுபட்ட ரசிகர் மீது கட்டாயமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கால்பந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers