அரசியலில் களமிறங்குகிறாரா கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா? அவரே அளித்த பதில்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

அரசியலில் ஈடுபடப்போவதாக வெளியான செய்திகள் குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா விளக்கமளித்துள்ளார்.

குமார் சங்ககாரா விரைவில் அரசியலில் களமிறங்கப்போவதாகவும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் கவனம் செலுத்தப்போவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து சங்ககாரா விளக்கமளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலில் களமிறங்கும் எந்த லட்சியமும் எனக்கு இல்லை. நான் அரசியலில் ஈடுபடப்போவதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தியே.

இப்போது மட்டுமல்ல, எப்போதும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...