ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4வது தங்கம் வென்ற இந்தியா

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கணை ராகி சர்னோபத் தங்கம் வென்றுள்ளார்.

இந்தோனேஷியாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா இதுவரை 3 தங்கப்பதங்களை வென்றிருந்தது.

இந்நிலையில், மகளிர்கான 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டி இன்று நடைபெற்றது. இதன் இறுதுச்சுற்றுக்கு இந்திய வீராங்கனை ராகி சர்னோபத் முன்னேறினார்.

சிறப்பாக செயல்பட்ட அவர், தாய்லாந்து வீராங்கனையின் சவாலை முறியடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவுக்கு 4 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன. அத்துடன் துப்பாக்கிச் சுடுதலில் இது 2வது தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers