அனுஷ்கா கொடுத்த முத்தம் வீணாகவில்லை: இங்கிலாந்து மண்ணில் சாதித்த கோஹ்லி

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இங்கிலாந்து அணிக்கெதிரான பெற்ற வெற்றியை தனிப்பட்ட முறையில் என்னுடைய மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கெதிராக நாட்டிங்காமில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியடைந்தது.

போட்டியின் முதல் இன்னிங்சில் 97 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 103 ரங்களும் குவித்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து பேட்டியளித்த அவர், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன். மேலும், தனிப்பட்ட முறையில் இந்த வெற்றியினை என்னுடைய மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன். ஏனெனில் அவர் தான், அதிகளவில் என்ன ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்துவார்.

நேர்மறையான மனநிலையில் என்னை இருக்க வைப்பதும் அவர் தான் என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

முன்னதாக இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த விராட் கோஹ்லி, மைதானத்திலிருந்து மட்டை மூலம் பறக்கும் முத்தம் கொடுக்க, அவரது மனைவி அனுஷ்கா சர்மா கேலரியில் இருந்து பதிலுக்கு பறக்கும் முத்தம் கொடுத்துள்ளார்.

இது ஒன்றும் முதல் முறை கிடையாது. கோஹ்லி எங்கு விளையாட சொன்றாலும், அங்கு அனுஷ்கா சர்மா இருப்பார். கேலரியில் இருந்துகொண்டு பறக்கும் முத்தங்களை கொடுத்து உற்சாகப்படுத்துவார். இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் ஆரம்பத்தில் இந்திய அணி சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்தால், பல்வேறு விமர்சனத்திற்கு ஆளானது.

ஆனால், விமர்சனங்களை தவிடுபொடியாக்கி வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி.

ஆகமொத்தம் அனுஷ்கா சர்மா கொடுத்த முத்தத்தை விராட்கோலி வீணாக்கவில்லை என நெட்டிசன்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers