நாய்களுடன் விளையாடி மகிழும் டோனி! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி, நாய்களுக்கு பந்துகளை வீசி பயிற்சியளிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய வீரர் மகேந்திர சிங் டோனி இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்றார். அதன் பின்னர் இந்தியா திரும்பிய அவர், ஜார்க்கண்டில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

அங்கு தான் வளர்க்கும் நாய்களுடன் டோனி விளையாடி மகிழ்கிறார். டென்னிஸ் பந்துகளை டோனி வீசுகிறார். நாய்கள் அதனை லாவகமாக கவ்வி கொண்டு வந்து தருகின்றன.

இந்த வீடியோ டோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அதில் ‘கொஞ்சம் அரவணைப்பு, கேட்சிங் பயிற்சி மற்றும் அதிகளவிலான அன்பு கிடைப்பது விலைமதிப்பில்லாத ஒன்று’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அடுத்த மாதம் தொடங்க உள்ள ஆசிய கிண்ணப் போட்டியில் டோனி பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்