சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் பிரபல இங்கிலாந்து வீரர் அலஸ்டெய்ர் குக்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இங்கிலாந்து அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் அலஸ்டெய்ர் குக், சர்வேதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்திலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் பிரபல கிரிக்கெட் வீரரான அலஸ்டெய்ர் குக் (33), உலகின் சிறந்த மட்டையாளர்களில் ஒருவராக அறியப்பட்டவர்.

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் வரலாற்றில் 2010/11-ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரின் வெற்றி மற்றும் 2012/13-ம் ஆண்டில் இந்திய அணிக்கெதிரான வெற்றியில் குக் முக்கிய பங்கு வகித்தார்.

இங்கிலாந்து அணிக்காக 59 டெஸ்ட் போட்டியில் கேப்டனாக இருந்த குக் 24 வெற்றி, 22 தோல்வி, 13 டிரா கண்டுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கெதிராக இரட்டை சதங்கள் அடித்தாலும், நடப்பாண்டில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த முடியாமல் அலஸ்டெய்ர் குக் திணற ஆரம்பித்தார். நடப்பாண்டில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருந்ததால், ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அலஸ்டெய்ர் குக், 32 சதங்கள் உட்பட 12,254 ரன்களை குவித்துள்ளார்.

இந்த நிலையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ள குக், கடந்த சில மாதங்களாகவே நான் சிந்தித்து வருகிறேன். தெளிவான யோசனைக்கு பின்னரே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம் என்ற முடிவை எடுத்துள்ளேன்.

இது என் வாழ்நாளில் ஒரு சோகமான நாள் என்றாலும் கூட பெரிய புன்னகையுடன் நான் இந்த அறிவிப்பினை வெளியிடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், நான் தனித்தனியாக நன்றி சொல்ல நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் என்னுடைய நீண்ட கால ஆலோசகர், பயிற்சியாளர் மற்றும் சிறுவயது முதலே முன்னோடியாக இருந்த கிரஹாம் கூச் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தாலும், எஞ்சியிருக்கும் இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியிலும், சசெக்ஸ் அணிக்காகவும் குக் தொடர்ந்து விளையாடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers