ரொனால்டோவை புகழ்ந்து தள்ளிய மெஸ்சி

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் வலுவில்லாத அணி என பார்சிலோனா வீரர் லயோனல் மெஸ்சி தெரிவித்துள்ளார்.

ரியல் மாட்ரிட் கிளப் அணியில் விளையாடி வந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை, இத்தாலியின் யுவாண்டஸ் அணி வாங்கியது.

இது ரியல் மாட்ரிட் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போதைய கால்பந்து உலகில் ரொனால்டோ ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார். அதே போல் அவருக்கு போட்டியாக, பார்சிலோனா கிளப் அணியில் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி விளையாடி வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எனினும், மெஸ்சியா? ரொனால்டோவா? என்கிற சண்டையும் ரசிகர்கள் இடத்தில் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில், ரொனால்டோவை புகழ்ந்து மெஸ்சி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘சிறந்த வீரர்களைக் கொண்ட ரியல் மாட்ரிட் அணி, உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

ஆனால், கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் அணி, சற்று தரம் குறைந்த அணியாக இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. தற்போது யுவாண்டஸ் அணி, சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக மாறியுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

AFP

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers