மின்னல் வேகத்தில் சென்ற போட்டியாளரின் பைக் பிரேக்கை பிடித்த வீரர்: அதிர்ச்சி வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இத்தாலியில் நடத்த பைக் ரேஸ் ஒன்றில் வீரர் ஒருவர், ரேஸ் நடைபெறும்போது போட்டியாளரின் பைக் பிரேக்கை பிடித்து அழுத்திய விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் சான் மரினோ நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை Moto GP பைக் ரேஸ் நடந்தது. இந்த போட்டியின் நடுவே ரோமோனா பெனாட்டி என்ற வீரருக்கும், ஸ்டேபானோ மான்சி என்ற வீரருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால், ரேஸில் சென்று கொண்டிருந்தபோது இருவரும் தங்களது பைக்கால் இடித்துக் கொண்டனர். இதனால் ரோமோனா பெனாட்டி மிகுந்த கோபமடைந்துள்ளார்.

அதன் பின்னர் நடந்த சுற்று ஒன்றில், ரேஸ் நடந்து கொண்டிருக்கும்போதே மான்சியின் அருகில் சென்ற ரோமோனா, திடீரென அவரது பைக் பிரேக்கை அழுத்திவிட்டார். இதனால் நிலை தடுமாறிய மான்சி, பின் பைக்கை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ரோமோனா பெனாட்டிக்கு இரண்டு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

பின்னர் தனது செயலுக்கு ரோமோனா பெனாட்டி மன்னிப்பு கோரினார். எனினும் இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers