'தூக்கி அடிக்காதவருக்கு பேரு ஹிட்மேன்': ரோகித் சர்மாவை கலாய்த்த சஹால்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவை, சுழற்பந்துவீச்சாளர் சஹால் இணையத்தில் கலாய்த்து கருத்து பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்தில் விளையாடிய இந்திய அணி 4-1 என்ற கணக்கில் பரிதாபமாக தொடரை இழந்தது. இதனால் ரசிகர்கள் உட்பட முன்னணி வீரர்கள் பலரும் இந்திய அணியை கடுமையாக சாடினார்.

இதனை தொடர்ந்து இந்திய அணி நாளை மறுநாள் ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளது.

இப்போட்டியில் விராட்கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கட்டுள்ளார். இதற்காக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் ரோகித், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டு, 'எடு பேட்டை, அடுத்த தொடருக்கு (ஆசிய கோப்பை) கவனம் செலுத்த தயார்' என பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோவில் அனைத்து பந்துகளையும் ரோகித் டிஃபென்ஸ் வைத்தே ஆடியிருப்பார். 'ஹிட்மேன்' என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் ரோகித், டிஃபென்ஸ் வைத்து ஆடியிருப்பதை பார்த்த சுழற்பந்து வீச்சாளர் சஹால், டிஃபென்ஸ் வைக்காமல் தூக்கி அடிங்க என ரோகித் ஷர்மாவை கலாய்த்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...