கடந்த ஒரு ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணி எத்தனை போட்டிகளில் வென்றுள்ளது தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி கடந்த ஓராண்டில் பெற்ற வெற்றி, தோல்விகள் குறித்து தெரியவந்துள்ளது.

2017 செப்டம்பர் 15-ஆம் திகதி முதல் தற்போது வரை இலங்கை அணி 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்றுள்ளது, 2 போட்டிகளில் இலங்கை தோல்வியடைந்துள்ள நிலையில் 4 போட்டிகள் டிரா ஆகியுள்ளன.

அதன்படி இலங்கை அணியின் வெற்றி/தோல்வி விகிதம் 3.00 ஆகும்.

வேறு முன்னணி அணிகளை எடுத்து கொண்டால் தென் ஆப்பிரிக்கா 12 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றியும் 4-ல் தோல்வியும் அடைந்துள்ளது.

அவுஸ்திரேலியா 9 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றியும், மூன்றில் தோல்வியும் அடைந்துள்ளது.

இந்தியா 12 போட்டிகளில் விளையாடி 4-ல் வெற்றியும் 6-ல் தோல்வியும் அடைந்துள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers