டி10 கிரிக்கெட் போட்டி: லசித் மலிங்காவுக்கு வாய்ப்பு

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

64 சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் டி10 கிரிக்கெட் போட்டி துபாயில் நவம்பர் 23 முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) அங்கீகாரத்துடன் நடத்தப்படும் டி20 போட்டிகள் பல்வேறு நாடுகளில் பிரபலம் அடைந்துவரும் நிலையில், துபாயில் டி10 போட்டிகள் 2-வது ஆண்டாக நடத்தப்பட உள்ளன.

கடந்த ஆண்டு தொடரில் 6 அணிகள் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு 8 அணிகள் பங்கேற்கின்றன.

கிறிஸ் கெயில், ஜாகீர் கான், லசித் மலிங்கா, மோர்ன் மோர்கல், ரஷித் கான் இடம்பெற்றுள்ளனர். மற்றும் இந்திய வீரர்களில் ஜாகீர்கான், முகமது ஷமி ஆகியோரைத் தவிர வேறு எவரும் இடம் பெறவில்லை .

கடந்த ஆண்டு கேரளா கிங்ஸ், பஞ்சாப் லெஜன்ட்ஸ், மராத்தா அரேபியன்ஸ், பெங்கால் டைகர்ஸ், தி கராச்சியன்ஸ், ராஜ்புத்ஸ், நார்தன் வாரியர்ஸ், பக்தூன்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த ஆண்டு புதிதாக தி கராச்சியன்ஸ், நார்த்தன் வாரியர்ஸ் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்திய வீரர்கள் இரண்டு பேர் மட்டுமே தெரிவாகியுள்ளதால், வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க சிவப்பு கம்பளம் விரிக்கும் பிசிசிஐ , இந்திய வீரர்கள் மட்டும் வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாடத் தொடர்ந்து பாரா முகமாக இருந்து வருகிறது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்