தன் மீதான பலாத்கார புகாருக்கு காரணம் இது தான்: கால்பந்து ஜாம்பவான் சுளீர் விளக்கம்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள ஹொட்டலில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகாருக்கு கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ மறுப்பு தெரிவித்துள்ளார்.

தனது பெயரை பயன்படுத்தி புகழ் தேட முயற்சி மேற்கொள்கிறார் எனவும் ரினால்டோ குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக முதன் முறையாக பதிலளித்துள்ள ரொனால்டோ, இது வெறும் மோசடி. உண்மைக்கு புறம்பானது.

எனது இத்தனையாண்டு காலகட்டத்தில் பல்வேறு தடவை இதுபோன்ற புகார்களில் சிக்கவைக்கப்பட்டேன்.

ஆனால் அவை யாவும் உண்மை இல்லை என்பது காலம் நிரூபித்தது. அதுபோன்றே அமெரிக்க இளம்பெண் எழுப்பியுள்ள குற்றச்சாட்டும் என்றார்.

அமெரிக்கரான காதரின் என்ற 34 வயது பெண்மணியே, கடந்த 2009 ஆம் ஆண்டு ரொனால்டோ தம்மை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளவர்.

பலமுறை தாம் மறுப்பு தெரிவித்தும் ரொனால்டோ பலவந்தமாக தன்னுடன் உறவு கைத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மட்டுமின்றி இந்த தகவல்களை வெளியிடாமல் இருக்க சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு வாக்குறுதி அளித்ததாகவும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

மட்டுமின்றி ரொனால்டோவுடன் எடுத்த புகைப்படங்களையும் காதரின் வெளியிட்டிருந்தார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers