ஆசிய கிரிக்கெட் அணிகளில் இந்தியாவுக்கு மட்டுமே இது இருக்கு: மஹேலா ஜெயவர்தனே புகழாரம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

ஆசிய கிரிக்கெட் அணிகளில் இந்தியா தான் மிகவும் பேலன்ஸ் கொண்ட அணி என்று இலங்கை ஜாம்பவான் ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஆசிய கிண்ணத் தொடரில் இந்தியா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இத்தொடரில் இலங்கை அணி தொடக்க சுற்றோடு வெளியேறிய நிலையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் சூப்பர் 4 சுற்றோடு வெளியேறியது.

இந்நிலையில், இது குறித்து பேசிய மஹேலா ஜெயவர்தனே, ஆசிய அணிகளில் இந்தியாதான் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் பேலன்ஸ் கொண்ட அணி.

அவர்களின் வெளிப்பாடு கோப்பையை வெல்ல தகுதியுடையதாக இருந்தது.

மிக்க மகிழ்ச்சியோடு இந்தியா சொந்த நாடு திரும்பும். புதிய வீரர்கள் மற்றும் புதிய காம்பினேசன்களை இந்த தொடரில் செய்து பார்த்தார்கள்.

இது உலகக்கோப்பைக்கு அவர்கள் தயார் ஆகி வருவதை காட்டியது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...