மனைவியால் என் உயிருக்கு ஆபத்து இருக்கு! பொலிஸ் பாதுகாப்பு கேட்டுள்ள இந்திய அணியின் முக்கிய வீரர்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால் துப்பாக்கிய ஏந்திய பொலிசாரின் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி மீது கடந்த மார்ச் மாதம் அவரது மனைவி ஜஹான் பல்வேறு புகார்களை கூறினார்.

அப்போது அவர், முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக அவரது குடும்பத்தினர் என்னை கொடுமைப்படுத்தி வருகிறார்கள். அவர்களை என்னை கொலை செய்ய கூட முயற்சித்தார்கள் என்று கூறியிருந்தார்.

ஆனால் இதற்கு எல்லாம் முகமது ஷமி மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் மாவட்ட நீதிபதிக்கு அளீத்துள்ள மனுவில் தனக்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதிகாப்பு கேட்டு ரிநுதார் மாவட்ட நீதிபதி ஹேமந்த் குமார் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

மாவட்ட நீதிபதி தனது கீழ்நிலை அதிகாரிகளை மனுவைப் பரிசீலுக்கும் படி கூறியுள்ளார். முகமது ஷமிக்கு அளிக்கபட்டு வந்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்கனவே விலக்கி கொள்ளப்பட்டது குறிப்பிடதக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers