முத்தம் மட்டும் போதும், விட்டு விடுகிறேன்: கால்பந்து ஜாம்பவானுக்கு எதிராக மேலும் பலாத்கார புகார்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
768Shares
768Shares
ibctamil.com

உலக கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவுக்கு எதிரான அதிர வைக்கும் ஆதாரங்களுமாக இளம் மொடல் காதரின் மயோர்க்கா மீண்டும் ஊடகங்களை சந்தித்துள்ளார்.

ரொனால்டோ தன்னை 2009 ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக அமெரிக்க மொடல் ஒருவர் பகீர் தகவலை வெளியிட்டிருந்தார்.

ஆனால் மொடல் வெளியிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொய் எனவும், புகழ் பெறும் நோக்கில் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ரொனால்டோ தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த விவகாரத்தை பாதிக்கப்பட்ட இளம் மொடல் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும், ரொனால்டோ குறித்த மேலதிக தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதில், ரொனால்டோவுக்கு 24 வயது இருக்கும்போது அச்சம்பவம் நடந்தது என கூறும் மயோர்க்கா, லாஸ் வேகாஸில் ரொனால்டோ, அவரது உறவினர் மற்றும் சகோதரியின் கணவர் என மூவரும் சுற்றுலாவுக்கு வந்திருந்ததாகவும்,

அப்போது 25 வயதேயான மயோர்க்கா மொடலிங் துறையில் அறிமுகமான காலம். ரெய்ன் இரவு விடுதியிலும் அவர் பணியாற்றி வந்துள்ளார்.

பாம்ஸ் ரிஸார்ட்டில் உள்ள பிரபலங்களுக்கான பகுதியில் மயோர்க்காவை தனியாக சந்தித்த ரொனால்டோ, தமது தனிப்பட்ட அறையான எண் 57306-கு இரவு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் மாற்று உடை ஏதும் இல்லை என்பதால் தமக்கு வர முடியாது என கூறிய மயோர்க்காவை உடைக்கு ஏற்பாடு செய்கிறேன் எனவும் ரொனால்டோ நிர்பந்தித்துள்ளதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இரவு ரொனால்டோவின் அறைக்கு தனியாக சென்ற மயோர்க்காவிடம் பாலியல் உறவுக்கு ரொனால்டோ நிர்பந்தித்துள்ளார்.

ஆனால் மயோர்க்கா அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, முத்தம் மட்டும் தந்தால் போதும் விட்டுவிடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மயோர்க்காவை நிர்பந்தித்து அவருடன் ரொனால்டோ பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பும் கோரியுள்ளார் ரொனால்டோ.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்