இலங்கை கிரிக்கெட் மீது ஊழல் குற்றச்சாட்டுகள்: ஐசிசி வெளியிட்ட தகவல்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
250Shares
250Shares
ibctamil.com

இலங்கை கிரிக்கெட் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ள நிலையில் அது குறித்து விசாரணை நடந்து வருவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் சமீபகால செயல்பாடுகள் மோசமாக உள்ளது.

ஆசிய கிண்ணத்தின் தொடக்கத்திலேயே இலங்கை அணி தொடரிலிருந்து வெளியேறியது.

ஜாம்பவான்களான முரளிதரன், ஜெயவர்தனே, சங்ககாரா, தில்ஷான் போன்றோரின் ஓய்வுக்கு பின்னர் இலங்கை அணி திணறி வரும் நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது முக்கியமான விடயமாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஐசிசி-யின் ஊழல் எதிர்ப்புப் பிரிவு பொது மேலாளர் அலெக்ஸ் மார்ஷல் கூறுகையில், இது குறித்து மேலும் கருத்து தெரிவிப்பது சரியானதாக இருக்காது.

ஆனால் இது குறித்த அறிக்கையை இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளோம்.

இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் வரும் 10-ஆம் திகதி தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்கும் எங்கள் விசாரணைக்கும் தொடர்பில்லை என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்