பாலியல் புகார் எதிரொலி: நட்சத்திர வீரர் ரொனால்டோ கால்பந்து அணியிலிருந்து அதிரடி நீக்கம்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

அமெரிக்காவின் பிரபல மொடல் அழகியின் புகாரை அடுத்து, உலகின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை போர்ச்சுகல் கால்பந்து அணியிலிருந்து நீக்கி அணி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , கால்பந்து வீரர் ரொனால்டோ தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகவும், அதனை மறைக்க ரூ. 3 கோடி வரை தன்னிடம் பேரம் பேசியதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.

ஆனால் இதற்கு ரொனால்டோ மறுப்பு தெரிவித்ததோடு, இது பொய்யான குற்றச்சாட்டு எனவும், தனது நற்பெயரை கெடுக்க இது போன்று அவர் நடந்து கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

தற்போது இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், போர்த்துக்கல் அணி வீரர்களுக்கான பட்டியலில் ரொனால்டோவின் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. போர்த்துக்கல் அணி வரும் அக்டோபர் 11-ம் தேதி துவங்கி போலந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளை எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers