பிரபல வீரருக்கு கிரிக்கெட் விளையாட தடை: ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் வீரர் அகமது செஷாத் 4 மாத காலம் விளையாட தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

தடைசெய்யப்பட்ட போதைப் பொருளை பயன்படுத்தியதாக பாகிஸ்தான் வீரர் அகமது ஷேசாத் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் அவர் தோல்வி அடைந்ததால் அவர் ஊக்கமருத்து எடுத்துக்கொண்டது உறுதியானது.

இதனையடுத்து அவர் 4 மாத காலம் விளையாட தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதன் காரணமாக வரும் நவம்பர் 11ம் திகதி வரை அவரால் எந்த கிரிக்கெட் தொடரிலும் விளையாட முடியாது.

கடந்த ஜூலை 10ஆம் திகதி ஊக்கமருத்து சோதனைக்காக அவரிடமிரிந்து பெற்ற மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு தடை செய்யப்பட்ட மருந்துகள் உள்ளது என தெரியவந்தது.

இதனால் அன்றிலிருந்து 4 மாத தடை தொடங்குவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers