சாலையில் தவறி விழுந்த இந்திய வீரர் ஷிகர் தவான்: வைரல் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தன்னுடைய குழந்தைகளுடன் விளையாடும்பொழுது சாலையில் தவறி விழும் வீடியோ காட்சியினை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியது.

ஆசிய கிண்ணம் தொடரில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதினை வென்ற இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இந்த டெஸ்ட் தொடருக்கான வீரர்கள் பட்டியலில் தேர்வாகவில்லை.

இதனால் தற்போது தன்னுடைய விடுமுறையை குடும்பத்தினருடன் செலவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் ஷிகர் தவான் என்னுடைய குழந்தைகளுடன் விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது என குறிப்பிட்டு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் சிறிய ரக விளையாட்டு கார் ஒன்றினை ஓட்டும் ஷிகர் இறுதியில் தடுமாறி கீழே விழுகிறார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers