'மனைவியோட இருக்க அனுமதி கொடுங்க': புலம்பும் இந்திய கேப்டன் விராட்கோஹ்லி

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளின் போது மனைவிகளுடன் முழுமையாக தங்க அனுமதிக்க வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளுக்கு எப்பொழுதுமே தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மாவுடன் செல்வது வழக்கம்.

அங்கு போட்டி இல்லாத நாட்களில் மனைவியுடன் ஊர் சுற்றுவதும், அவருடன் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.கோஹ்லியின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விராட்கோஹ்லி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது மனைவியுடன் முழுமையாகத் தங்க அனுமதிக்க வேண்டும் என பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையானது முறையாக இந்திய அணியின் மேலாளர் மூலம் பிசிசிஐக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது. வீரர்களுடன் அவர்களின் மனைவிகள் 2 வாரங்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப் பட்டு வரும் நிலையில் இதை மாற்றியமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார் விராட்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அணியின் நிர்வாகக்குழு, எங்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது உண்மை தான. ஆனால் இது தொடர்பான முடிவுகளை விரைவில் நாங்கள் எடுக்க போவதில்லை. புதிய அதிகாரிகளுக்கு இது குறித்து முடிவெடுக்கும் வாய்ப்பை வழங்க இருக்கிறோம். தற்போதுள்ள முறையில் எந்த மாற்றமும் இல்லை என ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளனர்.

முன்னதாக இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாடிய போது, வீரர்கள் மட்டும் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில், விராட்கோஹ்லி மட்டும் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers