சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்: நடிகை ப்ரீத்தி ஜிந்தா விருப்பம்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 11 வருடங்களாக நடந்து வரும் ஐபிஎல் தொடரில் ஸ்ரீசாந்த் துவங்கி பல கிரிக்கெட் வீரர்கள் சூத்தாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளன.

இதனை தடுக்கும் விதமாகா ஐபிஎல் போட்டிகள் துவங்க ஆரம்பித்ததும், ஊழல் கண்காணிப்பு பிரிவினர் மிகவும் விழிப்புடன் இருக்க ஆரம்பித்து விடுவார்.

இந்த நிலையில் பிரபல நடிகையும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், அரசாங்கம் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கினால், அது வருவாய் மற்றும் ஒரு நல்ல ஆதாரமாக இருக்கும். இரண்டாவதாக, நாம் இந்த சூதாட்ட தந்திரத்தை நிறுத்த முடியும், ஏனெனில் எத்தனை பேரை நீங்கள் கட்டுப்படுத்த முடியும்.

அடிக்கடி உண்மை கண்டறியும் சோதனையை ரேண்டம் முறையில் நடத்த வேண்டும் என்று நான் சொல்கிறேன். இதனை பிசிசிஐ ஒரு கொள்கையாக எடுத்துக் கொள்ள எடுத்துக்கொண்டால் அற்புதமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers