முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் படுகாயம்! குணமடைய வாழ்த்தும் ரசிகர்கள்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
228Shares
228Shares
ibctamil.com

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், அலைச்சறுக்கு விளையாட்டின்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன். அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய ஹைடன், ஓய்வுக்கு பின்னர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கிறார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஹைடன் தனது மகனுடன் குயின்ஸ் லேண்ட் கடலில் அலைச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் ஹைடன் படுகாயமடைந்தார்.

இந்த விபத்தில் ஹைடனின் கழுத்து, நெற்றி, முதுகு உள்ளிட்ட பல பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அத்துடன் எலும்பு முறிவும் ஏற்பட்ட நிலையில், தற்போது அவர் மருத்துவமனை தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், தான் காயமடைந்த புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்