50 லட்சம் ஏமாந்த இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் தாய்! அமலாக்க துறையில் புகார்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியில் ஒரு காலத்தில் அதிரடி வீரராக வலம் வந்தவர் தான், யுவராஜ் சிங். ஆனால் தற்போது போதுமான பார்ம் இல்லாத காரணத்தினால் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தாயார் சப்னம் சிங் மும்பையைச் சேர்ந்த நிதி நிறுவனத்தில் 1 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். அந்த நிறுவனம் அவரிடம் முதலீட்டு தொகைக்கு 84 சதவீதம் திருப்பி தருவதாக உறுதி அளித்துள்ளது. ஆனால் 50 லட்சம் வரை கொடுத்த அந்நிறுவனம் பின் பணம் கொடுப்பதை நிறுத்தியுள்ளது.

இதனால் சப்னம் சிங் மும்பை அமலாக்க துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை ஏற்றுக் கொண்ட அமலாக்க துறை அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையில் அந்நிறுவனத்தில் மொத்தமாக 700 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் டிராவிட் 15 கோடி, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவல் 75 லட்சம் நிதி நிறுவனத்திடம், தங்களின் பணத்தை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers