சக வீரர்களிடம் அடிஉதை..பானிப்பூரி விற்று இந்திய கிரிக்கெட் அணியில் ஜொலிக்கும் இளம்வீரர்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

யாசஸ்வி ஜெய்ஸ்வால் என்பவர் வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்து இன்று 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் ஜொலிக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி கிராமத்தை சேர்ந்தவர் யாசஸ்வி.

ஏழ்மை காரணமாக 11 வயதில் மும்பைக்கு சென்ற அவர் மாமாவின் பால் பண்ணையில் பணிபுரிந்த போது தான் கிரிக்கெட் வாழ்க்கையில் அடிவைத்தார்.

காலையில் பயிற்சி மேற்கொள்ள சென்றதால், மாமா அவரை பணியிலிருந்து துரத்தி விட்டார். இதனால் மும்பையில் யாருமே இல்லாத யாசாஸ்வி ஒரு உள்ளூர் அணியில் சேர்ந்தார்.

அங்கு சக வீரர்களிடம் அடி வாங்குவது, வீரர்களுக்கு சமைப்பது என பல்வேறு பிரச்சனைகளை யாசாஸ்வி சந்தித்தார். பணப் பிரச்சனையை சமாளிக்க பாணி பூரி விற்றுள்ளார்.

12 வயதில் வாழ்க்கையை வெறுத்த போன தருணத்தில், கிரிக்கெட் பயிற்சியாளர் ஜூவலா சிங் யாசாஸ்வியை சந்தித்தார். இந்த சந்திப்பு அவரின் வாழ்க்கையே மாற்றியது.

உள்ளூர் கிரிக்கெட்டில் யாசாஸ்வியை பயிற்சியாளர் விளையாட வைத்தார். அப்போது மூன்று ஆண்டுகளில் அவர் 51 சதம் விளாசினார். யாசாஸ்விக்கு விளையாட பேட் இல்லாத தருணத்தில் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர், சச்சின் டெண்டுல்கர் அவருக்கு பேட் வாங்கி தந்துள்ளனர்.

தனது திறமையால், 19 வயதுக்குட்பட்டவருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் யாசாஸ்வி தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஆசிய கோப்பையில் 318 ரன்களை விளாசி தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.

வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்த யாசாஸ்வி இன்று நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers