டோனி மீண்டும் கேப்டன் ஆனது இவர்களுக்கு அதிருப்தியாம்: ஏன் தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
224Shares
224Shares
ibctamil.com

இந்திய வீரர் டோனிக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டதால் தேர்வு குழு அதிருப்தி அடைந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

அண்மையில் முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா 7வது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.

இதன் லீக் சுற்றில் ஹாங்காங், பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியதால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா, சிகர் தவான், புவனேஸ்வர் குமார், பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இதனால் வேறு வழியின்றி கேப்டன் பொறுப்பு டோனிக்கு வழங்கப்பட்டது. இது டோனி கேப்டனாக விளையாடிய 200வது போட்டியாகும்.

டோனிக்கு கேப்டன் பொறுப்பை அளிக்கும் வகையில் சூழ்நிலை ஏற்பட்டதற்கு இந்திய அணி தேர்வு குழு அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அந்த போட்டி வெற்றி - தோல்வியின்றி டை ஆனது. போட்டி டை ஆனதை விட டோனிக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டதால் அதிருப்தி அதிகமானதாக தேர்வு குழு கருதுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்