இலங்கை முன்னாள் கேப்டன் ரணதுங்கா மீது விமானிப் பணிப்பெண் பாலியல் புகார்!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
233Shares
233Shares
ibctamil.com

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுனா ரணதுங்கா மீது, இந்திய விமானப் பணிப்பெண்ணொருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த கேப்டனாக அர்ஜுனா ரணதுங்கா புகழப்பட்டு வருகிறார். தற்போது அவர் இலங்கையின் பெட்ரோலியத்துறை அமைச்சராக உள்ளார்.

இந்நிலையில், இந்திய விமானப் பணிப்பெண் ஒருவர் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பணிப்பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த புகாரினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘இந்தியாவுக்கு இலங்கை அணி பயணம் மேற்கொண்டபோது, மும்பை ஜூஹு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் தங்கி இருந்தனர்.

அப்போது, இலங்கை வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்க தோழிகளுடன் சென்றபோது, ரணதுங்கா என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார். அப்போது அவர் என்னை மிரட்டியும், தாக்கியும் என்னை பலவந்தப்படுத்தினார்.

ஆனால், அங்கிருந்து நான் தப்பி வந்து ஹோட்டலில் உள்ள வரவேற்பறை பணியாளர்களிடம் இந்த விடயத்தை தெரிவித்தேன். ஆனால், அந்தப் பணியாளர்கள் உன்னுடைய தனிப்பட்ட விடயத்தில் நாங்கள் தலையிட முடியாது என தெரிவித்து விட்டனர்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்