இதை செய்யலேன்னா அணியில் இருக்க முடியாது: டோனியை எச்சரித்த அனுபவம் குறைந்த வீரர்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

டோனி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி, தன் மீதான விமர்சனங்களை தோற்கடிப்பார் என்று நம்புவதாக கவுதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் சமீபத்தில் பேட்டிங்கில் சொதப்பலாக விளையாடி வரும் இந்திய அணியின் அனுபவமிக்க வீரர் டோனியும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

அவர் அணியில் இடப்பெற்று இருப்பது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இதுகுறித்து டோனியை விட அனுபவம் குறைந்த வீரரான கவுதம் கம்பீர் பேசியுள்ளார்.

அதில், நீங்கள் உங்கள் ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்துவது மட்டும் தான் உங்களை அணியில் வைத்திருப்பதற்கான ஒரே அடிப்படை.

நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றால் அணியில் இருக்க முடியாது.

டோனி சிறப்பாக பேட்டிங்கில் செயல்பட்டு அவர் மீதான விமர்சனங்களை தோற்கடிப்பார் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers