தமிழ்நாட்டை விட பாகிஸ்தானுக்கு செல்வது சிறந்தது: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

தமிழ்நாட்டை விட பாகிஸ்தானுக்கு செல்வது சிறந்தது எனக்கூறி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நவஜோத்சிங் சித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் கட்சியில் பாஞ்சாப் மாநில அமைச்சருமான நவஜோத்சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பதவியேற்பு விழாவிற்கு சென்று அவரை கட்டிப்பிடித்து பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையனற்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது, தென் இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு செல்வது மிகவும் சிறந்தது. நான் தமிழகத்திற்கு சென்றால் அங்கு பேசப்படும் வார்த்தையும் எனக்கு புரியாது, அவர்களின் உணவு முறையும் பிடிக்காது. அங்கு நீண்ட நாட்கள் என்னால் தங்கவும் முடியாது. அவர்களுடைய கலாச்சாரம் முற்றிலும் வேறுவிதமானது.

அதேசமயம் நான் பாகிஸ்தான் சென்றால் அங்கு பஞ்சாப் மற்றும் ஹிந்தி மொழி பேசும் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் என்னால் நீண்ட நாட்கள் தங்க முடியும். எனக்கு தமிழ்நாட்டில் வணக்கம் போன்ற ஒரு சில வார்த்தைகள் மட்டுமே தெரியும். அதேபோல இட்லி சாப்பிட்டுள்ளேன். மற்றபடி அங்கு நீண்ட நாட்கள் இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

நவஜோத்சிங் சித்துவின் இந்த கருத்தானது தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்