தொடர்ச்சியாக 5ஆவது இறுதிப்போட்டியில் மோதும் ஜொலிஸ்ரார்- சென்றலைட்ஸ் அணிகள்: இன்றைய வெற்றி யாருக்கு?

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

KCCC விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்படும் கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிகள் இன்று 20/10/2018 சனிக்கிழமை கொக்குவில் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் இடம்பெறவுள்ளது.

பெண்களுக்கான இறுதிப்போட்டி மாலை 3.30 மணிக்கும் ஆண்களுக்கான இறுதிப்போட்டி மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் சென்றலைட் கழகத்தை (யாழ் மத்திய கல்லூரி) எதிர்த்து ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழக அணி (யாழ் இந்துக் கல்லூரி) மோதவுள்ளது.

இந்த இறுதிப்போட்டிக்கு வருகைதந்து ஆதரவளிக்குமாறு அனைத்து கூடைப்பந்தாட்ட ஆர்வலர்களையும் அன்புடன் அழைக்கின்றார்கள் போட்டி குழுவினர்.

இடம் :- கொக்குவில் இந்துக் கல்லூரி

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers