ஒரே ஆண்டில் இவ்வளவு ரன்களா? விராட் கோஹ்லி நிகழ்த்திய புதிய சாதனை

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது கோஹ்லி, இந்தாண்டில் 2000 ரன்களை கடந்து, 5வது முறையாக சாதனைப் படைத்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது வெஸ்ட் இஸ்டீஸ் அணி.

நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா மிக சிறப்பான வெற்றி பெற்றது.

இதில் இந்திய அணித்தலைவர் கோஹ்லி 140 ரன்கள் குவித்தார்.

ஒரு ஆண்டில் 2000 ரன்களை அடிப்பது ஒரு கிரிக்கெட் வீரர் சிறந்த வீரர் என்பதை வெளிப்படுத்தும்.

அந்த விதமாக கோஹ்லி 2012, 2014, 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டில் 2000 ரன்களை கடந்திருந்தார். இந்நிலையில் (2018) இந்தாண்டும் 2000 ரன்களை கடந்து கோஹ்லி சாதித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்