நிச்சயம் உண்மை வெளிவரும்: பாலியல் புகாருக்கு விளக்கமளித்த ரொனால்டோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

பாலியல் புகாருக்கு உள்ளான பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், நிச்சயம் உண்மை வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

போர்த்துகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது, கேத்தரின் மயோர்கா என்ற பெண் பாலியல் புகார் தெரிவித்தார்.

அவர் தனது குற்றச்சாட்டில், கடந்த 2009ஆம் ஆண்டில் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றின் அறையில் வைத்து, ரொனால்டோ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ரொனால்டோ மற்றும் கேத்தரின் ஒன்றாக கிளப் ஒன்றில் நடனமாடுவது போன்ற காட்சிகளும் வெளியாகின. இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரொனால்டோ, தன் மீதான புகார் குறித்து பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘கால்பந்து ஆடும்பொழுதும், பொது வாழ்க்கையிலும் நான் 100 சதவிதம் எடுத்துக்காட்டாக இருக்கிறேன். இது எனக்கு தெரியும். அதனால் நான் எப்பொழுதும் மகிழ்ச்சியான மனிதன்.

ஒரு சிறந்த அணியில் விளையாடுவதில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவன். எனது வழக்கறிஞர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். நானும் கூட. கால்பந்து விளையாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

எனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறேன். என்னுடைய வாழ்வில் நலம் விரும்பும் மக்களை நான் கொண்டுள்ளேன். நிச்சயம், உண்மை முதல் இடத்தில் வந்து எப்பொழுதும் நிற்கும். அதனால் நலமுடன் உள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...