பொலிசிடம் அபராதம் செலுத்தினாரா கிறிஸ் கெயில்? வைரலாகும் புகைப்படம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில், மும்பை பொலிஸ் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து போஸ் கொடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி, டெஸ்ட் தொடரை 0-2 என இழந்த நிலையில், தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில், அந்த அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ் கெய்ல், மும்பை பொலிசாரின் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்த சிலர் ட்விட்டரில், கெய்ல் அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக, பொலிசார் அவருக்கு அபார சீட்டு வழங்கியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவருக்கு அப்படி அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை என்றும், விராட் கோஹ்லியை பார்ப்பதற்காக அவர் வந்ததாகவும் மும்பை பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers