ஆண் குழந்தை பெற்றெடுத்தார் டென்னீஸ் வீராங்கனை சானியா மிர்சா

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

பிரபல இந்திய டென்னீஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதித்தவர்.

இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சர்ச்சைக்குரிய முறையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார். இருப்பினும் அவர் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடி வருகிறார்.

சானியா மிர்சா தான் கர்ப்பமுற்று இருப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் தகவல் வெளியிட்டார். இந்த நிலையில், சானியா மிர்சா- சோயிப் மாலிக் ஜோடிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது.

சோயிப் மாலிக் டுவிட்டரில் இந்த தகவலை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார். சானியா மிர்சா- சோயிப் மாலிக்கிற்கு டுவிட்டரில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...