ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை அணியின் பயிற்சியாளர்: ஐசிசி எடுத்த அதிரடி நடவடிக்கை

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

ஐசிசியின் ஊழல் தடுப்பு குறியீட்டை மீறியதற்காக இலங்கை அணியின் பயிற்சியாளரை இடைநீக்கம் செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடி நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், பந்து வீச்சு பயிற்சியாளருமான நுவன் சோய்சா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஊழல் தடுப்புக் குறியீட்டை மீறிய மூன்று குற்றசாட்டுக்களுக்காக 14 நாட்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2.1.1, 2.1.4 மற்றும் 2.4.4 ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளுக்கு கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில்,
ஒரு சர்வதேச போட்டியின் முடிவு, முன்னேற்றம், நடத்தை அல்லது பிற அம்சத்தை சரிசெய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ அல்லது வேறு விதமாக பாதிக்கவோ முயற்சிக்கின்ற குழு போன்று செயல்படுதல்.
குறியீட்டு பிரிவு 2.1.1 ஐ மீறுவதற்கு ஒரு வீரரை நேரடியாக அணுகி, ஊழல் தடுப்பு குறியீட்டை மீறுவதற்கு மயக்குதல், ஊக்குவித்தல் ஆகும்.

ஊழல் குறியீட்டின் கீழ் அவருக்கு வந்த எந்தவித அழைப்புகளையோ அல்லது அணுகுமுறைகள் குறித்த முழு விவரங்களை சமர்ப்பிக்க தவறுதல் போன்றவையாகும்.

அவருக்கான இடைநீக்கம் வரும் 1ம் தேதியிலிருந்து துவங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்ட 14 நாட்களுக்குள் நுவன் சோய்சா பதிலளிக்க வேண்டும் எனவும், அதுவரை ஐசிசி நடவடிக்கை சம்மந்தமாக எந்த கருத்தும் தெரிவிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக இலங்கை அணியின் ஜாம்பவான் ஜெயசூர்யா ஊழல் தடுப்பு குறியீட்டை மீறியதாக ஐசிசி வழக்கு பதிவு செய்த பொழுது, "நான் எப்போதும் விளையாட்டிற்கான விவகாரங்களில் ஒருமைப்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் என்னை நடத்திக்கொண்டிருக்கிறேன், என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers