சானியாவிற்கு பிறந்த குழந்தை எந்த நாட்டின் குடிமகன்? வெளியான செய்தி

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

சோயப் மாலிக் - சானியா மிர்சாவிற்கு பிறந்த மகன் பாகிஸ்தான் குடியுரிமை பெற மாட்டான் என பாகிஸ்தான் பாஸ்போர்ட் மற்றும் குடிவரவு சட்டங்கள் கூறுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டென்னிஸ் வீரர் சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை கடந்த ஏப்ரல் 12, 2010 அன்று ஹைதராபாத்தில் திருமணம் செய்துகொண்டார்.

தற்போது இந்த தம்பதியினர் இருவரும் பாகிஸ்தானில் வசித்து வருகின்றனர். ஆனால் இதுவரை சானியா மிர்சாவிற்கு பாகிஸ்தான் குடியுரிமை வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் 6 முறை கிராண்ட் ஸ்லாம் வென்ற சானியா மிர்ஸா ஹைதராபாத், ரெயின்போ மருத்துவமனையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சோயப் மாலிக், தன்னுடைய மகனுக்கு இஜாஹான் மிர்ஸா-மாலிக் என பெயர் வைக்க உள்ளதாக அறிவித்தார். உருதுமொழியில் இஜாஹான் என்றால் "கடவுளின் பரிசு" என்பது பொருள்.

இந்த மகிழ்ச்சி செய்தி தொடர்பாக செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த மாலிக், "எங்களுடைய குழந்தை பாகிஸ்தான் தேசியவாதியாகவோ அல்லது இந்தியராகவோ இருக்காது. இந்தியா அல்லது பாகிஸ்தானின் தேசியவாதியாக தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை" என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள உள்நாட்டு ஊடகங்கள், பாகிஸ்தானின் பாஸ்போர்ட் மற்றும் குடிவரவு சட்டங்களின்படி ஒரு இந்திய குடிமகனுக்கு பாகிஸ்தான் குடியுரிமை வழங்கப்பட முடியாது என்று கூறி மத்திய புலனாய்வு அமைப்பின் (FIA) ஆதாரங்களைக் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், 19 நாடுகளுடன் பாகிஸ்தான் ஏற்பாடு செய்துள்ள இரட்டை தேசிய குடியுரிமை நாடுகளில் இந்தியா இடம்பெறவில்லை என்பதையும் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers