இந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்காதவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டாம்: வீடியோவில் ஆவேசமான விராட்கோஹ்லி

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்காதவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டாம் என இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி ஆவேசமாக ரசிகருக்கு பதில் கொடுத்துள்ளார்.

டோனிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி அணியை செம்மையாக வழிநடத்தி வருகிறார். சாதனைகள் பலவற்றையும் செய்துகொண்டே அணியையும் வெற்றிகரமான பாதையில் கொண்டு செல்கிறார்.

விரைவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டிக்காகவும் விராட்கோஹ்லி இந்திய அணியை தயார் செய்து வருகிறார்.

இந்த நிலையில், ரசிகர் ஒருவர் விராட்கோஹ்லியின் பேட்டிங் திறமையை பற்றி கடுமையாக விமர்சனம் செய்து கருத்து பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகா விராட்கோஹ்லி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ஒரு ரசிகர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். அதில், "அதிக மதிப்பீடு கொண்ட விராட்கோஹ்லியின் பேட்டிங்கில் நான் சிறப்பாக எதையும் பார்க்கவில்லை.

நான் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசிப்பதைக் காட்டிலும், இங்கிலாந்து, அவுஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பேட் செய்வதை ரசித்துப் பார்ப்பேன்" என்று அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

இதற்கு என்னுடைய பதில் என்னவெனில், “ என்னைப் பொறுத்தவரை இந்த கருத்தைக் கூறிய அந்த ரசிகர் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்காவது சென்று வசிக்கலாம். எதற்காக மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு, இந்தியாவில் அந்த ரசிகர் வாழ வேண்டும்?

நீங்கள் என்னை விரும்பவில்லை என்பதற்காக நான் இப்படி பேசவில்லை. மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு, இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. உங்களுடைய முன்னுரிமை எதுவென்று முடிவு செய்யுங்கள் என காட்டமாக பதிலளித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்